Ad Banner
Ad Banner
 பொது

அரசாங்கத்துடன் இந்திய சமூகத்தை இணைக்கிறது 'நண்பா' திட்டம்

22/06/2025 07:50 PM

கோலாலம்பூர், 22 ஜூன் (பெர்னாமா) -- இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுப்படுத்தும் நோக்கில் சமூக தொடர்பு துறை J-KOM-மின் கீழ், NANBA எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கக் கொள்கைகள், அதன் முயற்சிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள பல்வேறு தகவல்களையும் வாய்ப்புகளையும் இந்திய சமுதாயம், குறிப்பாக இளையோர் சமூகம் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள இத்திட்டம் வடிவமைக்கப்பப்பட்டுள்ளது. 

Nadi Aspirasi Nasional Bersama Anak Muda - NANBA  எனும் தமிழ் வார்த்தையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் மலேசிய மடானி குறித்தத் தகவல்களை  மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

சுய வளர்ச்சி, மென் திறன்கள், இணைய பாதுகாப்பு மற்றும் அரசாங்கக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது போன்றவற்றில் இந்திய சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது NANBA-வின் முக்கிய இலக்காக உள்ளது. 

இத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி ஒன்று வரும் ஜூன் 28-ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர் லெம்பா பந்தாய், IWK Eco Park தளத்தில் நடைபெறவிருக்கிறது. 
காலை மணி 8 தொடங்கி மாலை மணி 4 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை, தொடர்பு அமைச்சர் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கின்றார். 

விளக்க கூட்டங்களுடன், பிள்ளைகளுக்கு வண்ணம் தீட்டுதல், பெரியோருக்கு புதையல் தேடுதல், அதிர்ஷட குலுக்கல், ரஹ்மா மடானி விற்பனை என்று இன்னும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்... 

இதில் பங்கேற்று பயன்பெற இந்திய சமூகதினரும் அரசு மற்றும் தனியார் துறைகளும் அழைக்கப்படுகின்றனர். 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)