Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

கோலாபுரி செருப்புகளுக்கு அதிகரிக்கும் தேவை

03/07/2025 02:35 PM

மகாராஷ்டிரா, 03 ஜூலை (பெர்னாமா) -- அனைத்துலக ஆடம்பர ஆடை வடிவமைப்பு நிறுவனமான PRADA, இந்தியாவில் தயாரிக்கப்படும் செருப்புகளை காட்சிப்படுத்திய நடவடிக்கை இந்தியர்கள் இடையே கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

அந்த செருப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை அந்நிறுவனம் குறிப்பிடத் தவறியதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

இதனை சாதமாக பயன்படுத்தி, 12 ஆம் நூற்றாண்டின் வடிவமைப்பில் தயாரிக்கப்படும் அந்த செருப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில், இந்திய காலணி விற்பனையாளர்களும் தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த கைவினைப்பொருள் தேவை சந்தையில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கோலாபுரி செருப்பு என்று பொதுவாக அழைக்கப்படும் அந்த செருப்புகளின் விற்பனையும் கடந்த ஒரு வாரமாக உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

''எனக்கு அதிக விலைக்கு ஆடம்பர முத்திரை கொண்ட ஒரு செருப்பு வழங்கப்பட்டால், ஆனால் கோலாபுரி செருப்பில் அதே நீடித்து உழைக்கும் தன்மையும் உறுதியும் இருந்தால், அது மலிவு விலையில் இருந்தால், நான் கோலாபுரி செருப்பையே வாங்க விரும்புவேன்,'' என்று பயனீட்டாளர் சந்தேஷ் தெரிவித்தார்.

''இது எங்கள் தயாரிப்பு, நாங்கள் அவர்களின் தயாரிப்புகளை 100,000 அல்லது 200,000 அல்லது 1,000,000 ரூபாய்க்கு வாங்கினால், உள்ளூர்வாசிகளும் (கைவினை தொழிலாளர்கள்) வளரலாம். எங்கள் கைவினைஞர்களும் தயாரிப்புகளும் மதிக்கப்பட வேண்டும். இது (அவர்களின்) கையால் செய்யப்பட்ட கடின உழைப்பு,'' என்று பயனீட்டாளர் நேஹா தெரிவித்தார்.

இத்தாலி மிலானில் கோலாபுரி செருப்பின் வடிவமைப்புகளைக் கொண்ட செருப்புகளை பிராடா நிறுவனம் காட்சிப்படுத்தியது.

அதன் செருப்புகளின் வடிவமைப்பு இந்தியாவை சேர்ந்தது என்று அந்நிறுவனம் குறிப்பிடத் தவறியதால், இணையத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பண்டைய இந்தியர்களின் வடிவமைப்பின் அடிப்படையில் அந்த செருப்புகள் தயாரிக்கப்பட்டதை பிரடா ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதலும் வழங்கப்பட்டது.

இதனால் அந்த செருப்புகள் தற்போது உலக கவனத்தை ஈர்த்துள்ளன.

பிராடாவின் அந்த செருப்பு 844 அமெரிக்க டாலர் அல்லது 3,565 ரிங்கிட் 06 சென் தொடங்கி விற்கப்படும் நிலையில், இந்தியாவில் அதே வடிவமைப்பிலான கோலாபுரி செருப்பு 12 அமெரிக்க டாலர் அல்லது 50 ரிங்கிட் 69 சென்னுக்கு விற்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)