கிரீட், 03 ஜூலை (பெர்னாமா) -- கிரேக்கத்தில் பிரபல சுற்றுலா தளமான கிரீடில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மோசமான காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
அந்நாட்டின் மிகப்பெரிய தீவில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் குறைந்தது 155 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
38 இயந்திரங்கள் மற்றும் நீர் தாங்கி லாரிகளை பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக கிரேக்கத்தின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
மாலை வேளையில் ஏற்பட்ட காட்டுத் தீ, கடுமையான காற்றினால் தீவிரமடைந்தது.
தீயணைப்பு பணிகளுக்கு அது சவாலாக இருந்ததோடு, சில பகுதிகள் மீண்டும் தீப்பிடிக்கவும் வித்திட்டது.
சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் தொலைகாட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)