Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நெறிமுறை ஒப்பந்தத்தில் தீமோர் லெஸ்தே-வின் பங்கேற்பு குறித்து SEANWFZ EXCOM-மில் விவாதிப்பு

07/07/2025 06:08 PM

கோலாலம்பூர், 07 ஜூலை (பெர்னாமா) -- நெறிமுறை ஒப்பந்தத்தில் தீமோர் லெஸ்தேவின் பங்கேற்பு உட்பட இதர விவகாரங்கள் குறித்து, இன்று, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ஷோன்ஃபெஸ்ட் எக்ஸ்கோம் (SEANWFZ EXCOM) எனப்படும் தென்கிழக்கு ஆசிய அணு ஆயுதம் இல்லாத மண்டல ஆணையத்தின் நிர்வாகச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

அந்நாட்டின் பங்கேற்பு, ஒப்பந்தத்தின் புவியியல் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு, ஆசியானில் தீமோர் லெஸ்தே உறுப்பினராவது தொடர்பிலான நேர்மறையான அம்சங்களையும் பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முஹமட் சின் தெரிவித்தார். 

நாளை தொடங்கி ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் 58-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஏ.எம்.எம் 58 மற்றும் அது தொடர்புடைய கூட்டங்கள் முன்னிட்டு நடத்தப்பட்ட ஷோன்ஃபெஸ்ட் நிர்வாகச் செயற்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற டத்தோ ஶ்ரீ அம்ரான் அவ்வாறு கூறினார். 

அதோடு, ஷோன்ஃபெஸ்ட் ஒப்பந்த நெறிமுறையில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து அணுசக்தி நாடுகளின் கையொப்பத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதும் அக்கூட்டத்தின் நோக்கமாகும்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]