லண்டன், 07 ஜூலை (பெர்னாமா) -- விம்பள்டன் டென்னிஸ் போட்டியியின் ஆடவர் பிரிவில் கடும் போட்டிக்கு பின்னர் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்கார கார்லோஸ் அல்காராஸ்.
தொடக்கத்திலேயே தடுமாறிய அவர், பின்னர் மீண்டு வந்து, எண்ரூ ரூபலவை
வீழ்த்தி அடுத்த சுற்றில் கால் வைத்தார்.
அனைத்துலல இங்கிலாந்து கிளப்பில் தொடர்ந்து மூன்றாவது பட்டத்தை வெல்ல முயற்சிக்கும் ஸ்பெயின்ன் கார்லோஸ் அல்காராஸ், 6-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கடைசி எட்டு ஆட்டத்திற்கு தேர்வானார்.
இந்த ஆட்டக்களத்தில் இறங்கி இருக்கும் நட்சத்திரங்களான ஏழு முறை வெற்றியாளர் நோவக் ஜோகோவிச் மற்றும் உலகின் முதன்நிலை வீரர் யென்னிக் சின்னர் ஆகிய இருவரைக் காட்டிலும் அல்கராஸ் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
இவ்வாட்டத்தின் முதல் செட்டில் 6-7 தோல்வியைத் தழுவிய பின்னர், விட்ட இடத்தை பிடித்து இறுதியில் வெற்றிப் பெற்றார்.
அடுத்த சுற்றில் அவர், உபசரணை நாட்டின் வீரர் கேமரன் நோரி உடன் மோதுகின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)