டுஷான்பே, 03 ஜூலை (பெர்னாமா) -- தஜிகிஸ்தான், டுஷான்பேவில் நடைபெற்று வரும் 2026 மகளிர் ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா, குழு நிலையில் வெற்றிப் பெற்றது.
இன்று அதிகாலை நடைபெற்ற H குழுவின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மலேசியா உபசரணை அணியை 1-0 என்ற நிலையில் தோற்கடித்தது.
செண்டரல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், இரு அணிகளும் தாக்குதல் நடத்தியதால் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.
ஆனால் முதல் பாதியில் எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை.
மலேசியாவின் ஒரே கோல், மாற்று ஆட்டக்காரர் இரண்டாம் பாதியில் போட்டார்..
கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பாலஸ்தீனத்தை தோற்கடித்த பிறகு, மலேசியாவுக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.
மலேசியா தற்போது ஆறு புள்ளிகளுடன் வட கொரியாவை அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு, வரும் சனிக்கிழமை வட கொரியாவுடன் நடைபெறும் ஆட்டத்தில் தேசிய அணி வெற்றி பெற வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)