கோலாலம்பூர், 12 ஜூலை (பெர்னாமா) - ஆசியான் 2045: நமது பகிரப்பட்ட எதிர்காலம்' என்ற கருபொருளின் தொலைநோக்குப் பார்வைக்கான நிலைப்பாட்டை ஆசியான் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
நிலைத்தன்மை, புத்தாக்கம், செயல்திறன் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆசியான் சமூகத்தை உருவாக்கும் திட்டமாக, இதன் வியூகத்தின் முக்கியத்துவத்தை அது எடுத்துரைக்கிறது.
ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரையில் நடைபெற்ற 58-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டந்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின்படி,
ஆசியான் சமூக கட்டமைப்பு முயற்சிகளை முன்னேற்றும் அடித்தளமாக உள்ள தொலைநோக்குப் பார்வையை முழுமையாகவும் பலனளிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படுவதை அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆசியான் சமூகத்தின் எதிர்கால பாதையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், APSC-இன் 2025 பெருந்திட்டம் , AEC 2025 பெருந்திட்டம், ASCC 2025 பெருந்திட்டம் மற்றும் MPAC 2025 ஆகியவற்றின் காலாண்டு மதிப்பாய்வுகளின் முடிவுகளின் எதிர்பார்ப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
அமைதி மற்றும் வட்டார நிலைத்தன்மையைப் பேணுவதில், 1982-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு UNCLOS போன்ற அனைத்துலக சட்டத்தின்படி...
அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்தாமை ஆகியவற்றுடன் சட்ட மற்றும் அரசதந்திர செயல்முறைகளுக்கு முழு மரியாதை உட்பட, சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான தங்களின் உறுதிப்பாட்டையும் இக்கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தி இருந்தது.
அதேவேளையில், ஆசியானின் நிறுவனத் திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் பல்வேறு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பையும் இது மீண்டும் நினைவுகூர்ந்தது.
ஆசியான் தலைவர்களின் அறிக்கையும் ஆசியானின் திறன் மற்றும் நிறுவன செயல்திறனை வலுப்படுத்துவது குறித்தும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)