கோலா பெராங், 12 ஜூலை (பெர்னாமா) - திரெங்கானு மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்ட HHFS எனப்படும் Hibrid Hidro மிதக்கும் சூரிய சக்தி திட்டம் மற்றும் பசுமை Hidrogen மையம் ஆகியவை வட்டார மற்றும் அனைத்துலக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவையாகும்.
Petroliam Nasional நிறுவனம், Petronas மற்றும் தேசிய மின்சார வாரியம் TNB ஒத்துழைப்பிலான அந்த புதிய, சுத்தமான மற்றும் பசுமையான மாற்று ஆற்றல் திட்டம், உலகளாவிய நிலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பசுமை சக்தி இலக்குகள் மற்றும் நாட்டின் எரிசக்தி கொள்கையுடன் ஒத்துப்போவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"உதாரணமாக கெஞிரில் நீர் மற்றும் பசுமை ஹைட்ரஜனின் வளர்ச்சி அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், தற்போது திரெங்கானு மட்டுமின்றி, கெஞிரும் ஓர் ஈர்ப்பு மிக்க பகுதியாக மாறியுள்ளது," என்றார் அவர்.
திரெங்கானு, கெஞிரில் உள்ள சுல்தான் மாஹ்முட்மின் உற்பத்தி நிலையத்தில், HHFS மற்றும் பசுமை ஹைட்ராஜன் மையத்தை தொடக்கி வைத்த பின்னர் பிரதமர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே Hibrid Hidro மிதக்கும் சூரிய சக்தி திட்டம் மற்றும் பசுமை Hidrogen மையம் ஆகியவை ஆசியான் மின் கட்டமைப்பு திட்டத்துடன் தொடர்புடையவை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த மாபெரும் முயற்சி வியட்நாமை, கிளந்தான் மற்றும் திரெங்கானுவுடன் இணைக்கும் கடலடி மின்கம்பி திட்டத்துடன் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து, தீபகற்ப மலேசியாவில் உள்ள பல மாநிலங்களின் மின் கட்டமைப்புடன் இது இணைக்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூரிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தில் பகாங், சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)