Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கோலாலம்பூர் காற்பந்து சங்கத்திற்கு 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

13/07/2025 03:11 PM

பங்சார், 13 ஜூலை (பெர்னாமா) --   கோலாலம்பூரில் காற்பந்து விளையாட்டின் மறுவளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கோலாலம்பூர் காற்பந்து சங்கம் KLFA-விற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மக்களின் விருப்பமான காற்பந்து விளையாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதுடன், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக, அவர் கூறினார்.

"இது நமது நாட்டில் காற்பந்தின் வளர்ச்சியை உயர்த்துவதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால், அது அடிப்படைகளிலிருந்து தொடங்குகிறது. எனவே தான், கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு அல்லது பிற பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்து முன்னதாக கூறப்பட்டது முக்கியமானது", என்றார் அவர்.

நேற்றிரவு, கோலாலம்பூர், பங்சாரில் நடைபெற்ற KLFA-வின் 50-ஆம் ஆண்டின் நிறைவு விழா கலந்துக் கொண்டு உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் மற்றும் KLFA-வின் தலைவர் சைட் யாசிட் சைட் ஒமார் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

விளையாட்டு கலாச்சாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், சில சமயங்களில் ஒற்றுமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வரம்பு மீறிய ஆதரவாளர்களின் நடத்தைத் தொடர்பிலும் சாடியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)