நிபோங் திபால், 14 ஜூலை (பெர்னாமா) -- வெளி தரப்பினர் ஏற்பாடு செய்யப்படும் உள்ளடக்கம் தெரியாத ஊக்கமளிக்கும் திட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கல்வி அமைச்சின் ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தகுந்த ஆதரவைப் பெற ஆசிரியர்கள் அமைச்சிடம் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.
''முடிந்தால், உள்ளடக்கம் மற்றும் 'பொருள்' அடிப்படையில் நமக்குத் தெரியாத ஊக்கமளிக்கும் திட்டங்களில் நாம் ஈடுபடத் தேவையில்லை. இயன்றவரை, பள்ளி அளவிலான பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார் அவர்.
நிபோங் திபாலில் உள்ள தாமான் விடுரி தேசிய இடைநிலைப் பள்ளியைப் பார்வையிட்டப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஃபட்லினா இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, ஆசிரியர்களுக்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் ஊக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
இதில் முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய ஆலோசனைச் சேவைகளும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தேகங்களை எழுப்பக்கூடிய அல்லது கற்பித்தல் தொழிலின் நேர்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களில் கல்வியாளர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
ஒழுக்கக்கேடானதாகக் கூறப்படும் eHATI குடும்ப ஊக்கத் திட்டம் தொடர்பான குற்றங்களை அடையாளம் காண ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதை நேற்று, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான், உறுதிப்படுத்தி இருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)