வாஷிங்டன், 13 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் மீது 30 விழுக்காட்டு வரி விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவின் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இது உலகளாவிய வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளைச் சேதப்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்பின் இந்நடவடிக்கை குறித்து விமர்சித்துள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன்டெர் லாயன், அட்லாண்டிக் கடல்கடந்த விநியோகச் சங்கிலிகளுக்கு சாத்தியமான இடையூறுகளை எச்சரித்துள்ளதோடு தேவைப்பட்டால் எதிர் நடவடிக்கைகளுக்கும் உறுதியளித்தார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி இருப்பதோடு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஐரோப்பிய ஒன்றிய நலன்களைப் பாதுகாப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் அமெரிக்காவின் இந்த வரிகளை நிராகரித்துள்ளார்.
வட அமெரிக்காவின் போட்டித்தன்மையை மேம்படுத்த வலுவான வட்டார ஒத்துழைப்பை அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)