சுங்கை சிப்புட், 13 ஜூலை (பெர்னாமா) -- இஸ்லாமிய மார்க்கத்தில், முஹர்ரம் மாதம் வரும் பத்தாவது நாளான "ஆஷூரா" தினத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்குவது முதன்மை நோக்கமாகும்.
அதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஆஷூரா கஞ்சி உணவை, எளிய மக்களுக்கு வழங்கி வரும் சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகம் இவ்வாண்டிலும், தனத கடமையை நிறைவேற்றியுள்ளது.
ஆஷூரா என்பது பத்தைக் குறிப்பதால் பத்து விதமான தானியங்களைக் கொண்டு கஞ்சி தயாரித்து, பத்தாம் நாளில் ஏழை மக்களுக்கு உணவளிப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
ஆகவே, இந்நாளில் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் ஆஷூரா கஞ்சி விநியோக நிகழ்வை நடத்தி வருவதாகவும், சுங்கை சிப்புட்டில் இது மிகவும் பிரபலம் என்றும் அங்குள்ள இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் இமாம் உதஸ்தாட் அல் ஹபிஸ் முஹமட் அலி சிடேக் கூறினார்.
சமுக ஒற்றுமையும், இல்லாதோருக்கு உணவை மட்டுமின்றி அன்பையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு நாளாக "ஆஷூரா" கஞ்சி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
சுங்கை சிப்புட்டில் நடத்தப்படும் ஆஷூரா நிகழ்வில் இந்து, முஸ்லிம் மற்றும் சீன சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களும் பங்கேற்று சமய நல்லிணக்கத்தை பேணுவதாகவும் செய்வதாகவும் உஸ்தாட் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)