Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

லூக்காஸ் வெஸ்குவேசுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

18/07/2025 04:50 PM

மாட்ரிட், 18 ஜூலை (பெர்னாமா) -- ரியல் மாட்ரிட் கிளப்பில் நீண்டகாலமாக விளையாடிய மத்திய திடல் ஆட்டக்காரர் லூக்காஸ் வெஸ்குவேசுக்கு வியாழக்கிழமை பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

34 வயதுடைய லூக்காஸ் வெஸ்குவேஸ் அந்த கிளப்புடன் விளையாடிய 10 ஆண்டுகளில் 23 கிண்ணங்களை வென்றிருக்கிறார். 

அந்த 23 கிண்ணங்களுடன் வியாழக்கிழமை பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் தாக்குதல் ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே, கோல் காவலர் ஏண்ரி லுனின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

16 வயதில் ரியல் மாட்ரிட் கிளப்பில் விளையாடத் தொடங்கிய லூக்காஸ் வெஸ்குவேஸ் 400-கும் மேற்பட்ட ஆட்டங்களில் ரியல் மாட்ரிட்டின் முதன்மை அணியில் இடம்பெற்றிருந்தார். 

ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து விடைபெறும் வேளையில், அவர் அடுத்த எந்த கிளப்பில் தனது காற்பாந்து வாழ்க்கையைத் தொடரவிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதனை லூக்காஸ் வெஸ்குவேஸ் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]