Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இறுதி ஆட்டத்திற்கு அலெக்சாண்டர் கோவேசெவிக் தேர்வு

19/07/2025 06:17 PM

லாஸ் காபோஸ், 19 ஜூலை (பெர்னாமா) - மெக்சிகோவில் நடைபெறும் லாஸ் காபோஸ் பொது டென்னிஸ் போட்டி...

அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவேசெவிக் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அலெக்சாண்டர் கோவேசெவிக்  ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ்-வுடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தின் முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டாலும் அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-4 என்ற புள்ளிகளில் கைப்பற்றி கோவேசெவிக் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.

கிண்ணத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் கோவேசெவிக் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதவுள்ளார்.

மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஏடம் வால்டனுடன்  விளையாடிய டெனிஸ் ஷபோவலோவ் 6-2, 6-2 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)