கூலிம், ஜூலை 27 (பெர்னாமா) -- நாட்டின் எல்லை பகுதியில் பணியில் இருந்தபோது போலி கடப்பிதழ் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் அமலாக்க அதிகாரி தொடர்பான விசாரணை குறித்த முழு அறிக்கைக்காக உள்துறை அமைச்சு காத்திருக்கிறது.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்) தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் சையின் இடமிருந்து அது தொடர்பான அறிக்கைகளை தமது தரப்பு பெறும் என்று உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''அவர் இப்போதுதான் பணியின் 25-வது நாளில் உள்ளார். எனவே முதலில் அவர் அதனை கையாளட்டும். சரியான ஒருவரை அந்த இடத்தில் வைத்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கெடா கூலிம் சதுக்கத்தில் நடைபெற்ற மலேசிய தொண்டூழிய துறையின் 53-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கல்ந்துகொண்ட பின்னர், சைஃபுடின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)