Ad Banner
Ad Banner
 பொது

டாக்சி ஓட்டுநர்களுக்கு பயிற்சியளிக்க போக்குவரத்து அமைச்சு திட்டம்

27/07/2025 05:06 PM

கோலாலம்பூர், 27 ஜூலை (பெர்னாமா) -- 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு டாக்சி ஓட்டுநர்களுக்கு அடிப்படை மொழி மற்றும் ஓட்டுநர் நெறிமுறை பயிற்சி அளிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

டாக்சி சேவை, பொது போக்குவரத்து சேவையின் தூணாகவும் சுற்றுலா பயணிகளுக்கு முதல் போக்குவரத்து அம்சமாகவும் இருப்பதால் இந்நடவடிக்கை அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மேலும், டாக்சி ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் பங்களிப்பு ஊக்கத்தொகை 10 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் தமது முகநூல் பதிவின் வழி தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் கருதி பொது போக்குவரத்து துறையை வலுப்படுத்த தொழில்துறை உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றவிருப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக, மலேசியாவின் டாக்சி, வாடகை கார், லிமோசின் மற்றும் மலேசிய விமான நிலைய டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பின் மூன்றாவது ஆண்டு கூட்டத்தை அவர் தொடக்கி வைத்தார்.

இதன்வழி, இத்தொழில்துறையின் தேவைகளை கண்டறிய வாய்ப்பு கிட்டியதாக லோக் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]