தோக்கியோ, 21 ஜூலை (பெர்னாமா) -- ஜப்பானின் மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த பின்னரும், தாம் பதவியைத் தொடருவதாக பிரதமர் ஷிகேரு இஷிபா உறுதியளித்தார்.
இதனால், சொந்த கட்சிக்குள்ளேயே அவரின் எதிர்காலம் குறித்து சிலர் கேள்வி எழுப்பத் தொடங்கிய வேளையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்துள்ளன.
அமெரிக்கா உடான வரி குறித்த பேச்சுவார்த்தைகள், நாடு எதிர்நோக்கும் சவால்கள், அரசியல் நிலைத்தன்மை போன்ற விவகாரங்களைக் கவனிப்பதற்காக தாம் பதவியில் நீடிப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷிகேரு இஷிபா கூறினார்.
ஜப்பானில் பிரதமரின் பதவியைத் தீர்மானிப்பது மக்களவையாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஷிகேரு இஷிபாவின் லிபரல் ஜனநாயகக் கூட்டணி எல்.டி.பி, சிறுபான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
தற்போது மேலவையில் உள்ள மொத்தம் 248 இடங்களில் அக்கூட்டணி 122 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மக்களவையில் பெரும்பான்மையை பெற தவறியதோடு, மேலவையிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், இஷிபா பதவியில் நீண்ட நாட்கள் முடியாது என்று அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)