ஷென்சென், 21 ஜூலை (பெர்னாமா) -- தென் சீனக் கடலை விஃபா புயல் கடந்த வேளையில், வியட்நாமை அடுத்து சீனாவின் தெற்கு பகுதியும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
தெற்கு மாகாணமான குவாங்டொங்கில் உள்ள நகரங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அந்நாட்டின் ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
பலத்த காற்று மற்றும் கனமழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்ததோடு, சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
விழுந்த மரத்தின் அடியில் சிக்கியவர்களை வாகனத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள்
காப்பாற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.
குவாங்டொங், குவாங்ஷி, ஹைனான் மற்றும் ஃபுஜியான் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நாளை காலை வரை கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)