கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- 2025 சீனா பொது பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நாட்டின் மகளிர் இட்டையர்களான பெர்லிதான் - எம் தீரஹ்மா அடிப்படை உதவி அல்லது SARA திட்டத்தின் கீழ் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு நூறு ரிங்கிட் தொகை வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்.
மாறாக, குறைந்த வருமானம் பெரும் தரப்பினர் மீது அரசாங்கத்தின் பரிவுமிக்க நடவடிக்கையாக கருத வேண்டும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செய்யும் உதவியை குறைத்து மதிப்பிடும் செயல், குறைந்த வருமானம் பெரும் தரப்பினர் மீதான அக்கறை குறைவாக இருப்பதை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
''அவர் ஒரு பணக்காரர். T20 பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், நிச்சயமாக குறைத்து மதிப்பிட்டிருப்பார். ஆனால், இந்நாட்டில் பி40 பிரிவினர் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? நூறு ரிங்கிட்டிற்கு எத்தனை கிலோ அரிசி வாங்க முடியும்? எத்தனை கோழிகள் வாங்க முடியும்?'', என்றார் அவர்.
வியாழக்கிழமை இரவு PENN 2.0 சிறப்பு நிதி வழங்குவது மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கு பயனளிக்கக்கூடிய அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
மாறாக, இழிவாக பேசவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)