Ad Banner
Ad Banner
 உலகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லண்டனுக்குச் சென்றார்

24/07/2025 07:24 PM

லண்டன், ஜூலை 24 (பெர்னாமா) -- தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று லண்டனுக்கு வருகை மேற்கொண்டார்.

பிரிட்டிஷ் கார்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதையும், இந்திய துணிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு வரியில்லா அணுகலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மூன்று ஆண்டுகள் இடைவிடாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மே மாதம் நிறைவடைந்த இந்த ஒப்பந்தம், வர்த்தக தடைகளை நீக்கி, இரு நாடுகளுக்கும் சந்தை அணுகலை மேம்படுத்துவதன் வழி, இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உள்ளடக்கி உள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், ஒராண்டிற்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இங்கிலாந்திற்கு மோடி மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.

வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி அம்சங்களைப் பற்றி விவாதிக்கவும், வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் மோடி அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க உள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)