Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தேசிய ஓட்டப் பந்தைய விளையாட்டாளர்களின் பயிற்றுநராக கிருஷ்ணன் தேர்வு

24/07/2025 09:57 PM

திருத்தம்: இந்த செய்தியில் திருப்பதி அவர்கள் இயற்கை எய்தி விட்டார் எனும் தகவல் தவறானது. தவறான தகவலைக் கூறிய பயிற்சியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரினார். இந்த தவறுக்கு மன்னிக்கவும்.
 

ஈப்போ, 24 ஜூலை (பெர்னாமா) --  தேசிய ஓட்டப் பந்தைய விளையாட்டாளர்களின் பயிற்றுநனராக, பேராக் ஈப்போவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணன் வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த பயிற்சி துறைக்கு தேர்வாகும் ஒரே இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

திடல்தடப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களைத் தயார்ப்படுத்தி, அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆறு பயிற்றுனர்களில் 63 வயதான கிருஷ்ணனும் ஒருவராவார்.

1984-ஆம் ஆண்டு, ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் பயிற்சிகளை வழங்க தொடங்கியுள்ளார்.

பின்னர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுனர் துறையில் பட்டப்படிப்பை முடித்த அவர், தேசிய பயிற்றுனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதம் முதலாம் தேதி தொடங்கி தேசிய ஓட்டப் பந்தைய விளையாட்டாளர்களின் பயிற்றுநனராக தாம் பொறுப்பேற்க தொடங்குவது குறித்து கிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

''நான். குறிப்பாக, நீண்ட தூர ஓட்டத்தில் பயிற்சி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நீண்ட தூர பயிற்சி என்று பார்த்தால் ஏறக்குறைய 10 வருடத்திற்கு முன்னர் திருப்பதி அவர்கள் பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு இப்பொழுதுதான் ஒரு இந்தியரான என்னை நியமித்துள்ளனர்'', என்றார் அவர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில், பேராக், ஈப்போவில் கருடா எனும் ஓட்டப் பந்தய மன்றத்தை அமைத்து, அதில் விளையாட்டாளர்களுக்கு முறையே பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களை மாநிலம் மற்றும் தேசிய அளவிற்கு அழைத்து சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், விளையாட்டு துறையில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் அதிகரிக்க தாம் தொடர்ந்து முயற்சி செய்வதாக கிருஷ்ணன் வெங்கடாசலம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)