Ad Banner
Ad Banner
 உலகம்

அல்பேனியா காட்டுத் தீ;  2,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

26/07/2025 05:32 PM

அல்பேனியா, 26 ஜூலை (பெர்னாமா) -- அல்பேனியாவின் தென் பகுதியில் நேற்று தொடங்கி பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 2,0ந்க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

இத்தீவிபத்தால் பலர் காயமடைந்த வேளையில், அதிகமானோர் சுவாச பிரச்சனைக்கு ஆளானதாக டெல்வினெ நகரின் துணை மேயர் புருனில்டா மெல்கி கூறினார்.

டெல்வினெ பகுதியில் குறைந்தது ஆறு கிராமங்கள் மற்றும் ஒரு தேவாலயம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலாகின. 

இரு மீட்புக் குழுக்கள் ஹெலிகப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட பிறகே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாக அவர் கூறினார். 

100-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அல்பேனியாவைத் தவிர, பல்கான், கிரேக்கம் உட்பட பிற நாடுகளும் தற்போது கடும் வெப்பத்தையும் மூன்றாவது வெப்ப அலையையும் எதிர்கொண்டு வருகின்றன. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]