மூவார், 26 ஜூலை (பெர்னாமா) -- அண்மையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 100 ரிங்கிட் நிதியுதவி தொடர்பில் உருவாக்கப்படும் போலி இணைப்புகள் மூலம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போலவே, bantuannegara.com எனும் சட்டவிரோத வலைத்தளம் உருவாக்கப்பட்டிருப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் எந்தவோர் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் .gov.my என்று முடிவடைய வேண்டுமே தவிர, அதற்கு மாறாக முடிவடையக்கூடாது என்று தியோ விளக்கினார்.
''அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வழக்கமான DOT GOV DOT MY என்று முடியும். GOV என்றால் அரசாங்கம். MY என்றால் மலேசிய அரசாங்கம்,'' என்றார் அவர்.
எனினும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி கும்பல்கள் புதிய வலைத்தளங்களை உருவாக்குவது வழக்கமான ஒன்று என்பதையும் அவர் நினைவூட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]