Ad Banner
Ad Banner
 பொது

சண்டையில் ஆள் கடத்தல் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

25/07/2025 01:26 PM

சுபாங் ஜெயா, 25 ஜூலை (பெர்னாமா) --   கடந்த செவ்வாய்க்கிழமை, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் நடந்த சண்டையின் போது லாரியில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்குத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு 10 மணிக்கு, உலு சிலாங்கூர் மற்றும் பூச்சோங்கில் 18 மற்றும் 19 வயதுடைய அம்மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.

கைது செய்யப்பட்ட மூவருக்கான தடுப்பு காவல் விண்ணப்பம் இன்று காலை செய்யப்பட்டதாக ஏசிபி வான் அஸ்லான் தெரிவித்தார்.

அதே வழக்கின் விசாரணைக்கு உதவ 32 வயதுடைய ஆடவர் ஒருவரை போலீஸ் கைது செய்திருந்த நிலையில், அவர் நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடன் பிரச்சனையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக வான் அஸ்லான், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், சாலையின் நடுவில் ஒரு லாரிக்குப் பின்னால் பாதிக்கப்பட்டவருடன் சில ஆண்கள் சண்டையிட்டுக் கொள்ளும், 15 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)