மாலே, ஜூலை 27 (பெர்னாமா) -- நேற்று நடைபெற்ற மாலத்தீவின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
இரண்டு நாள்கள் மாலத்தீவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட மோடிக்கு, அந்நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகரில் உள்ள குடியரசு சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மோடியை அதிபர் முஹமாட் முய்சு மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், இராணுவ அணிவகுப்பு என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அவற்றை சுமார் 50 நிமிடங்கள் வரை அதிபர் முய்சு அருகில் அமர்ந்து மோடி கண்டு கழித்தார்.
தாம் மேற்கொண்ட அலுவல் பயணத்தில், இரு நாடுகளின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் பல துறைகள் கலந்துரையாடப்பட்டதாக மோடி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)