பைபெராச், ஜூலை 28 (பெர்னாமா) -- தெற்கு ஜெர்மனியில், நேற்று மாலை மூவர் உயிரிழந்ததோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ரயில் விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.
பயணப் பெட்டிகளில் யாரும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதோடு, காயமடைந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பைபெராச் நகரத்தின் மாவட்ட தீயணைப்புத் தலைவர் சார்லோட் சில்லர் தெரிவித்தார்.
ரயில் தடம் புரண்ட தகவல் கிடைத்ததும் சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், சேதத்தின் அளவு தெளிவாகத் தெரிந்தவுடன் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Riedlingen மற்றும் Munderkingen நகரங்களுக்கு இடையே, சம்பந்தப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகியபோது சுமார் 100 பேர் அதில் பயணித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)