பேங்காக், ஜூலை 28 (பெர்னாமா) -- தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு சந்தையில் இன்று துப்பாக்கி ஏந்திய ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டனர்.
இத்தகவலைத் தாய்லாந்து போலீஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி, தற்கொலை செய்து கொண்ட நபரும் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் ஒரு பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றப் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவர் உயிரிழந்ததாக அவசர சேவை பிரிவினர் குறிப்பிட்டனர்.
தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் மற்றும் சம்பவத்திற்கான நோக்கம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த எஞ்சிய ஐவரும் சந்தையின் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)