கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- டோல் கட்டணத்தை அகற்றுவது எளிதான காரியமல்ல.
ஏனெனில், நெடுஞ்சாலை மறுசீரமைப்பு பணிகள் உட்பட கோடிக்கணக்கில் தேவைப்படும் நிதியை அரசாங்கம் தேட வேண்டும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி, இன்று மக்களவையில் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தாத மாநிலங்களில் உள்ள மக்கள் உட்பட பிற நோக்கங்களுக்காக, அந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி கூறினார்.
''ஆனால் இந்த (சலுகை) நிறுவனங்கள் ROI (முதலீட்டு வருமானம்) அடைந்திருந்தால், சுமையாகக் கூறப்படும் தற்போதைய டோல் கட்டண விகிதங்களை குறைக்க முடியும். அது மிகவும் எதார்த்தமான நடைமுறையாக இருக்கும்'',. என்றார் அவர்
டோல் கட்டணம் தொடர்பில், மக்களவையில், பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)