கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஏற்ப, 2024ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கம் 19 ஆயிரத்து 750 கோடி ரிங்கிட் மொத்த கடன் தொகையைப் பதிவு செய்துள்ளது.
இதே காலக்கட்டத்தில், 2023-ஆம் ஆண்டில் பதிவான 22 ஆயிரத்து 660 கோடி ரிங்கிட்டை காட்டிலும் இந்தத் தொகை குறைவாகும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை 2022-ஆம் ஆண்டில் 5.5 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறையைக் காட்டிலும், 2024-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, GDP-யில் 4.1 விழுக்காட்டிற்கு குறைத்துள்ளதையும் காட்டுவதாக அவர் கூறினார்.
பொது நிதி மற்றும் நிதி பற்றாக்குறை கடப்பாட்டு சட்டம், (சட்டம் 850)-இன் கீழ், மிதமான காலக்கட்டத்தில், கே.டி.என்.கே-இல், 3 விழுக்காட்டு விகிதத்திற்கும் கீழ், நிதி பற்றாக்குறை இலக்கை உறுதிசெய்வதோடு, கே.டி.என்.கே-விற்கான கடன் விகிதம் 60 விழுக்காட்டிற்கும் மேற்போகாமல் இருப்பதை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிபாட்டிற்கு ஏற்ப உள்ளது. எனவே, 2022-ஆம் ஆண்டில் இருந்த 10.2 விழுக்காட்டு கடன் விகிதம், 2024-ஆம் ஆண்டில் 6.4 விழுக்காடாக குறைந்து வருவதைக் காண முடிகிறது
மத்திய அரசாங்கத்தின் கடன் தொகை, 2024-ஆம் ஆண்டு இறுதியில் பதிவான 1.25 லட்சம் கோடி ரிங்கிட்டைக் காட்டிலும், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையில் 13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதை லிம் சுட்டிக்காட்டினார்.
மேம்பாட்டு செலவினங்களைக் கையாள்வதனால் ஏற்படும், நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து கடன் தொகை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த லிம், படிப்படியாக நிதி ஒருங்கிணைப்பு, வருமான தளத்தை விரிவுபடுத்துதல், நிலையான வசூல், பொது செலவினங்களை மேம்படுத்துதல் போன்ற பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.
அதைத் தவிர்த்து, மேம்பாட்டுச் செலவினங்களின் கீழ், திட்டங்களுக்கு நிதியளிக்க மட்டுமே அரசாங்கக் கடன்கள் பயன்படுத்தப்படுவதோடு, நிதி உத்தரவாத வெளிப்பாடு வரம்பு, GDP-யில் 25 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதைத் தவிர்த்து, தேசிய எரிசக்தி மாற்ற செயல்திட்டம், என்.இ.டி.ஆர், புதிய தொழில்துறை பிரதானத் திட்டம் 2030, அரசாங்கம் தொடர்பான அமைப்புகள் செயல்படுத்துதல் மற்றும் சீர்திருத்த திட்டம், GEAR-uP, குறைந்தபட்ச ஊதிய சரிசெய்தல் போன்ற கொள்கை மேம்பாடுகள் ஆகிய அரசாங்கத்தின் வியூக முயற்சிகள் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதோடு, அரசாங்க வருமானத்தை வலுப்படுத்தி, கடன்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)