Ad Banner
Ad Banner
 பொது

மலேசியா இந்தோனேசியாவுடன் சுலாவேசி கடல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கிறது - பிரதமர்

03/08/2025 05:46 PM

கோத்தா கினபாலு, 03 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அனைத்துலகச் சட்டம், வரலாற்று உண்மைகள் மற்றும் சபாவின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில், மலேசியா இந்தோனேசியாவுடன் சுலாவேசி கடல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கிறது.

நீண்ட காலமாக இந்தோனேசியா நெருங்கிய நண்பராக இருப்பதால், கடல் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நல்லுறவுகள் பேணப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''நாம் சட்டம், வரலாறு ஆகியவற்றின் படி விவாதிக்க வேண்டும், அதை மாநில அரசாங்கம் (சபா) ஒப்புக் கொண்டு மாநில சட்டமன்றத்திற்கு (சபா) கொண்டு வர வேண்டும். அதுதான் ஓர் அதிகாரப்பூர்வ கூட்டத்திற்குத் தேவை,'' என்றார் அவர்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தமது தனிப்பட்ட நண்பர் என்பதால், ஒரு குடும்பத்திற்குள் இணக்கமாக இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)