Ad Banner
Ad Banner
 பொது

மரியாதை & உணர்திறனுடன் ஜாலுர் கெமிலாங்கை பறக்கவிட வேண்டும்

04/08/2025 05:49 PM

சிரம்பான், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) --   ஜாலுர் கெமிலாங்கை பறக்க விடுவதை அனைத்து தரப்பினரும் குறைத்து மதிப்பிடாமல், மரியாதையுடனும் உணர்திறனுடனும் அதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சி, ஜ.செ.க-வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார்.

தேசிய அடையாளமாக மதிக்கப்பட்டு பெருமையுடனும் தேசபக்தி உணர்வுடனும் ஜாலுர் கெமிலாங்கைப் பறக்க விட வேண்டும் என்பதால் அதை நிறுவுவதில் அனைத்து தரப்பினர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

"ஜாலுர் கெமிலாங் கொடியை இலகுவாக நினைக்க வேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் எச்சரிக்கின்றோம். அதை சரியாகவும் மரியாதையுடன் பறக்கவிட வேண்டும். உணர்திறன் இருக்க வேண்டும், ஆனால் சில நேரங்களில் தற்செயலாக ஏற்படக்கூடிய தவறுகள் உள்ளன. மேலும், நாங்கள் அதை சில தரப்பினரிடம் ஒப்படைக்கின்றோம். இந்த விவகாரத்தில் பள்ளி ஒரு அறிக்கையைத் தயாரித்து கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும்", என்றார் அவர்.

நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள சென் வா இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிரம்பான் நாடாளுமன்ற அளவிலான சுதந்திர மாதத்தைத் தொடக்கி வைத்த பின்னர்,

கடந்த வெள்ளிக்கிழமை, போர்ட்டிக்சனில் உள்ள தேசிய வகை சுங் ஹுவா சீனப்பள்ளி வளாகத்தில் ஜாலுர் கெமிலாங் கொடி தலைகீழாக பறக்கவிட்ட விவகாரம் குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)