ஹிரோஷிமா, 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜப்பான் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணு குண்டு வீசி இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அதனை நினைவு கூறும் விதமாக, இன்று Hஹிரோஷிமாவில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டது.
120 நாடுகள் மற்றும் அனைத்துலக பிரமுகர்கள் உட்பட சுமார் 55,000 பங்கேற்பாளர்கள் நினைவஞ்சலி கலந்து கொண்டனர்.
காலை மணி 8:15-க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
80 ஆண்டுகளுக்கு முன்பு, காலை மணி 8:15-க்கு ஹிரோஷிமா மீது அமெரிக்கா யுரேனியம் குண்டு வீசியது.
இதில் சுமார் 78,000 பேர் கொல்லப்பட்டனர்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)