Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மொண்ட்ரீயால் மாஸ்டர்ஸ்: இறுதியாட்டத்திற்கு தேர்வானார் விக்டோரியா

07/08/2025 06:31 PM

மொண்ட்ரீயால், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) --   WTA மொண்ட்ரீயால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார் உபரசரனை நாட்டின் விக்டோரியா எம்பாகோ.

இன்று நடைபெற்ற அறையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, அவர் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.

உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான எலெனா ரிபாகினாவுடன் விக்டோரியா எம்பாகோ விளையாடினார்.

இவ்வாட்டத்தின் முதல் சுற்றில் கசகஸ்தானின் ரிபாகினா 1-6 என்று வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களை 7-5, 7-6 என்ற புள்ளிகளில் எம்பாகோ கைப்பற்றினார்.

சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற்றுள்ளதால், உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவை அவர் பெற்றிருக்கிறார்.

இறுதி ஆட்டத்தில் எம்பாகோ, ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதவுள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், கடைசியாக 2022-ஆம் ஆண்டு மயாமி பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய ஒசாகா மீண்டும் WTA போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறார்.

இன்று நடைபெற்ற மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் கிளாரா டௌசனை ஒசாகா 6-2 7-6 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)