கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய மகளிர் கிண்ண காற்பந்தாட்டம்.
நேற்று கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற F குழுவுக்கான ஆட்டத்தில் மலேசியா 0-3 என்ற கோல்களில் ஈரானிடம் தோல்வி கண்டது.
முதல் பாதி ஆட்டத்தின் 13 மற்றும் 28-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஈரான் மலேசியாவை பின்னுக்குத் தள்ளியது.
இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் ஈரானின் அசல் கஜாரியன் தமது அணிக்கான மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த தோல்வியின் வழி புள்ளிப்பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மூன்று புள்ளிகளுடன் ஈரான் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் முதலாவது இடத்திலும் உள்ளன.
நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மலேசியா ஜப்பானுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)