Ad Banner
Ad Banner
 விளையாட்டு

WTA மாண்ட்ரீல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ; அரையிறுதிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா 

06/08/2025 06:48 PM

மொண்ட்ரீயால், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- WTA மாண்ட்ரீல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி.

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஜப்பானின் நவோமி ஒசாகா அரையிறுதி ஆட்டத்திற்கு முதல் முறையாக தேர்வாகினார்.

உக்ரேனின் எலினா ஸ்விடோலினாவுடன் நவோமி ஒசாகா விளையாடினார்.

இவ்வாட்டத்தில், 6-2, 6-2 என்ற நேரடி செட்களில் ஒசாகா வெற்றி பெற்றார்.

2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகளை ஈன்றெடுத்த ஒசாகா கடந்த 15 மாதங்களாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து தற்காலிக ஓய்வில் இருந்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)