Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

மலேசியர்களின் கலை மற்றும் பாரம்பரியத்தை முன்னிறுத்தி ஆபரணங்கள் வடிவமைப்பு

10/08/2025 05:38 PM

கூலிம், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியர்களின் கலை மற்றும் பாரம்பரியத்தை முன்னிறுத்தி, தமது சொந்த முத்திரையான masac+-இன் கீழ், ஆபரணங்களை உருவாக்கியுள்ளார் கெடா, கூலிமைச் சேர்ந்த கடிகார வடிவமைப்பாளர், முஹமாட் நோர் ரப்பானி அப்துல் ரஹிம்.

உள்ளூர் கலாச்சார அம்சங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, அவற்றை தினசரி பயன்படுத்தும் பொருள்களில் இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தமது கடிகார வடிவமைப்புகளில் உள்ள ஒவ்வொரு மையக்கருவும், இந்நாட்டுடன் தொடர்புடைய அம்சத்தத்தையும் கதையையும் கொண்டுள்ள வேளையில், ஒவ்வொரு மலேசியரும் அதை புரிந்து பெருமை கொள்ள வேண்டும் முஹமாட் நோர் ரப்பானி தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து நிலையிலான மக்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட பாரம்பரிய உணவான நாசி லெமாக்வை, கலாச்சார அம்சமாக தமது வடிவமைப்பில் பயன்படுத்தியிருப்பதாக அவர் விளக்கினார்.

"என்னுடைய பெரும்பாலான கடிகார வடிவமைப்புகள் மலேசிய கலாச்சாரம் மற்றும் பண்புகளை உள்ளடக்கி இருக்கும். ஏனென்றால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நாம் முன்னிலைப்படுத்தவில்லை என்றால், யார் செய்வார்கள் என்று நான் நினைத்தேன்? நாம்தான் இந்தப் பண்புகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்," என்றார் அவர்.

தமது கடிகார வடிவமைப்பில், சரவாக்கில் ஒரு கலாச்சார அடையாளமாக இருக்கும் கெஞ்சாலாங் பறவையின் வடிவத்தையும், பெரிய வடிவிலான வாவ் பட்டம் மற்றும் பம்பரம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் வடிவங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்தக் கடிகாரத்திற்கு தேவையான மூலப் பொருள்கள் ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து வாங்கப்படுகின்றன.

வாங்கிய மூலப் பொருள்களை தமது வீட்டிலேயே பொருத்தி, தமது மனைவியின் உதவியுடன் இணையத்தில் நோர் ரப்பானி விற்பனை செய்து வருகிறார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)