கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியா வயது முதிர்ந்த நாடாக மாறும் போதும், இளைஞர்களுக்கான வயது வரம்பை குறையும் போது ஏற்படும் வாய்ப்புகளை, இளைஞர்கள் வியூக அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் இளைஞர்களின் குரல்களை பதிவு செய்வது உட்பட ஐந்து கொள்கைகளை கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா பரிந்துரைத்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற கூட்டரசு பிரதேச அளவிலான தேசிய இளைஞர்கள் ஆலோசனை மன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றபோது டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா அப்பரிந்துரைகளை முன்வைத்தார்.
30 வயதிற்குள் திறமைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், இளைஞர்களை பொருளாதாரத்தில் உந்தச் செய்வது, தலைமுறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களின் நிதி மீள்தன்மையை வலுப்படுத்துதல் ஆகியவற்றையும் அவர் பரிந்துரைத்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் விதமாக, இது தொடர்புடைய நிறுவனங்கள் முழுமையான அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)