பேங்காக், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு தாய்லாந்து அனைத்துலக பூப்பந்து போட்டி.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில், நாட்டின் கலப்பு இரட்டையர்களான வீ யீ ஹெர்ன்-சான் வென் சே, முதல் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தனர்.
நக்கோன் ராட்சசிமா அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், உபசரணை நாட்டின் ரட்சபோல் மக்கசசித்தோர்ன்-நாட்டமொன் லைசுவான்இணையை, 22-20, 21-16 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி வீ யீ ஹெர்ன்-சான் வென் சே கிண்ணத்தை கைப்பற்றினர்.
இந்த ஆட்டம் 33 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
ரட்சபோல் மக்கசசித்தோர்ன்-நாட்டமொன் லைசுவான் ஜோடியுடன் நடைபெற்ற மூன்று ஆட்டங்களில், உலகின் 144-ஆம் நிலையில் உள்ள வீ யீ ஹெர்ன்-சான் வென் சே, இரு முறை வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)