ரஷ்யா, 10 ஆகஸ்ட் (பெர்னாமா) - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பு மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தயாராக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
இம்மூன்று தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது.
இருப்பினும், புதினின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ள வெள்ளை மாளிகை தற்போது திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக டோனல்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.
இதில், உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்துவது குறித்து கலந்துரையாடப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
இம்மூன்று தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் வழி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)