Ad Banner
Ad Banner
 உலகம்

சீனப் பொருள்களுக்கு வரி விதிக்கும் முடிவை மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்

12/08/2025 07:55 PM

வாஷிங்டன், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) - வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக...

சீனப் பொருள்களுக்கான கூடுதல் வரி அமலாக்கத்தை ஒத்திவைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்பட்டிருந்த அந்த கூடுதல் வரிவிதிப்பு வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சீனா மீதான வரிகளை நிறுத்தி வைப்பதை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக Truth Social தளம் வாயிலாக டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர பொருள்களுக்கான வரிகளை இவ்வாண்டு அதிகரித்ததை அடுத்து, இரு நாடுகளுமே மூன்று இலக்கங்களை எட்டிய நிலையில் அவை வர்த்தக தாக்கத்தை எதிர்நோக்கின.

அதனை பின்னர், கூடுதல் வரி விதிப்பை தற்காலிகமாக குறைப்பதற்கு இரு நாடுகளும் கடந்த மே மாதத்தில் ஒப்புக்கொண்டன.

அந்த தற்காலிக வரி குறைப்பு அவகாசம் இன்றோடு முடிவடைய இருந்தது.

அந்தக் காலக்கெடு நிறைவடையச் சில மணி நேரத்திற்கு முன்னர், புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆலோசனையின் பேரில், அமெரிக்காவும் சீனாவும் நடத்திய ஒரு கூட்டு  பேச்சுவார்த்தைகக்குப் பின்னர் அவகாச நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி 90 நாட்களுக்கு சீனா தனது ஆரம்ப கட்டண உயர்வை நிறுத்தி வைக்கும் அதேவேளையில் 10 விழுக்காட்டு வரியையும் தற்காத்து கொள்ளும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)