Ad Banner
Ad Banner
 பொது

கசான் ஹெலிகாப்டர் நிறுவனத்தைப் பார்வையிட்டார் மாமன்னர்

10/08/2025 01:33 PM

கசான், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) - உலகின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி மையமானகசான் ஹெலிகாப்டர் நிறுவனத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சனிக்கிழமை பார்வையிட்டார்.

Tatarstan குடியரசின் தலைவர் Rustam Minnikhanov மற்றும் கசான் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர்  Nikolai Yakovlev ஆகியோர் மாமன்னரை  வரவேற்றனர்.   

தற்காப்பு அமைச்சர் முஹமட் காலிட் நோர்டின், வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முஹமட் சின், ரஷ்யாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ சியோங் லூன் லாய் ஆகியோரும் மாமன்னருடன் சென்றிருந்தனர்.

வணிக, இராணுவ மற்றும் மீட்பு பணிகள் உட்பட ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் செயல்முறைகள், உற்பத்தித் தன்மைகள் மற்றும் அண்மைய தொழில்நுட்பமுறை ஆகியவை குறித்து சுல்தான் இப்ராஹிமுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் அவர் மாமன்னர் கண்காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டார்.

கசானால் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்கள் சுல்தான் இப்ராஹிமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)