Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

அமெரிக்க டென்னிஸ்; பட்டத்தை வென்றது எர்ராணி - வாவசொரி ஜோடி

21/08/2025 05:29 PM

நியூயார்க், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி. இன்று அதிகாலை நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி - எண்ரியா வாவசொரி ஜோடி வாகை சூடியது.

இகா ஸ்விடேக் - கேஸ்பர் ரூட் ஜோடியை தோற்கடித்தன் வழி அவர்கள் அமெரிக்க பட்டத்தை வெற்றிகரமாக தற்காத்துக்கொண்டுள்ளனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,  சாரா எர்ரானி - எண்ரியா வாவாசோரி மற்றும் - இகா ஸ்விடேக் - கேஸ்பர் ரூட்  ஜோடிகள் கடும் போட்டியை எதிர்கொண்டன.

முதல் செட்டை 6-3 என்ற நிலையில்  சாரா எர்ரானி - எண்ரியா வாவசொரி   இணையர் வென்ற வேளையில், இரண்டாம் செட்டை 5-7 என்று இகா ஸ்விடேக் - கேஸ்பர் ரூட் கைப்பற்றினர்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட் அவ்விரு ஜோடிகளுக்கும் சவாலாக இருந்த நிலையில், 10-6 என்ற புள்ளிகளில் இத்தாலி ஜோடி அதனை தங்களுக்கு சாதகமாக்கி வெற்றிப் பெற்றது.

இதன் வழி, 10 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கத்தையும் அவர்கள் பரிசாக வென்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)