ஜோகூர் பாரு, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோகூர், சிகாமாட்டில், இன்று காலை மணி 8.59-க்கு 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அம்மாநிலத்தின் பல பகுதிகள் உட்பட தென் பஹாங்கிலும் உணரப்பட்டுள்ளது.
தென் சிகாமாட்டிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், 2.33 டிகிரி வடக்கிற்கும், 102.79 டிகிரி கிழக்கிற்கு என 10 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா குறிப்பிட்டிருந்தது.
நிலநடுக்கத்தின் தற்போதைய நிலைமையையும், அதன் வளர்ச்சியையும் தங்கள் தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் மெட்மலேசியா குறிப்பிட்டிருந்தது.
இம்மாதம் 24-ஆம் தேதி, சிகாமாட்டில் காலை 6.13 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, மெட்மலேசியா முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
அதை தொடர்ந்து, காலை 9 மணிக்கு வடமேற்கே குளுவாங்கிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யொங் பெங்கில் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்ட 2.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)