Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறும்

04/09/2025 06:19 PM

பேங்காக், 04 செப்டம்பர் (பெர்னாமா) --   கடந்த வாரம், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நாளை அந்நாட்டின் மக்களைவில் நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பின் 159-வது பிரிவின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி நிரலை மக்களவைத் தலைவர் இணைத்துள்ளதாக, நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று, நேற்று பூம்ஜைதைக் கட்சி தனது தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

அதே நாளில், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசரின் ஒப்புதலை, ஆளும் கட்சியான பியூ தாய்யும் கோரி இருந்தது.

இதனிடையே, பூம்ஜைதைக் கட்சி தலைவர் அனுடின் சார்ன்விரகுலைப் பிரதமராக ஆதரிப்பதாகவும், புதிய நிர்வாகத்தை அமைக்க இணைந்து செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசாங்க ஆணையை இடைக்காலப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் சமர்ப்பித்ததை அடுத்து, சட்டப்பூர்வ அடிப்படையில் Privy மன்ற அலுவலகத்தால் அது திருப்பி அனுப்பப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)