கோலாலம்பூர், 04 செப்டம்பர் (பெர்னாமா) -- ஓ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தப்படுகிறது.
உள்நாட்டு தேவை மற்றும் நிலையான பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, பேங்க் நெகாரா மலேசியாவின், நாணயக் கொள்கை குழு, MPC (எம்.பி.சி) இம்முடிவை செய்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, அண்மைய பொருளாதார குறியீடுகள், உலகளாவிய வளர்ச்சியில் தொடர்ந்து வலுப்பெற்று வருவதை காட்டுகின்றன.
பயனீட்டாளர்களின் நிலையான செலவு, நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமைகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
எனவே, உலக பொருளாதார முன்னேற்றத்திற்கு இது சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 4.4 விழுக்காடாக விரிவடைந்துள்ளதாக எம்.பி.சி தெரிவித்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)