இந்தியா, 04 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியா பிஹாரில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், சர்ஜிட் சிங் தலைமையிலான தேசிய அணி, சீனாவை 2-0 என்ற கோல்களில் தோற்கடித்தது.
பிஹார் விளையாட்டு பல்கலைகழகத்தின் ஹாக்கி அரங்கில் இவ்வாட்டம் நடைபெற்றது.
இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் போடுவதில் பல முயற்சிகள் மேற்கொண்டன.
அதன் பயனாக 45-வது நிமிடத்தில், சைட் முஹமட் ஷஃபிக் சைட் சொலன் மலேசியாவுக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார்.
இரண்டே நிமிடங்களில் கழித்து, முஹமட் அகிமுல்லா அனுவார் எசோக் இரண்டாவது கோலை அடித்து Speedy Tigers அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் வழி மலேசியா புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)