Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பள்ளிகளில் சட்ட உணர்திறன் பயிற்சி; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்

27/08/2025 06:15 PM

புத்ராஜெயா, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பள்ளிகளில் சட்ட உணர்திறன் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை கல்வி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், MoU ஒன்றில் கையெழுத்திடவிருக்கின்றது.

இந்த வாராந்திரத் திட்டம், குறிப்பாக பகடிவதை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் கூறினார்.

''குழந்தைகளிடம் அதிகம் பழகுபவர். நாளொன்றுக்கு 8, 6 மணிநேரம் என்று வைத்துக் கொள்வோம். சட்டங்கள் இருப்பதை அவர் புரிந்துகொள்கிறார். எனவே, அவர் உணர்திறன் உடையவர். BHEU சட்டப் பிரிவாக அதுதான் எங்கள் நோக்கம். சட்டங்களை உருவாக்குவது ஒரு கண்ணோட்டம். சட்டங்களைச் செயல்படுத்துவது ஒரு கண்ணோட்டம். இரண்டும் சட்டத்தைப் புரிந்துகொள்வது. எனவே, சட்டம் அவர்களைப் பாதுகாக்க இருக்கிறது என்று மக்களுக்குத் தெரியாவிட்டால், சட்டம் சிறந்ததாக இருப்பதன் அர்த்தம் என்ன?'' என்றார் அவர்.

கல்வியாளர்கள் தங்கள் சட்டக் கடப்பாடுகள் மற்றும் உரிமைகளை நன்கு புரிந்துகொள்ளும் வகையில், சிறப்பு பயிற்சி தொகுதிகளை வழங்கவும் சட்ட கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அசாலினா கூறினார்.

சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பில் புகாரளிக்கத் தவறும், குழந்தைகள் பாலியல் குற்றச் சட்டம், Seksyen 19-இன் கீழ், பள்ளிகள் மற்றும் தலைமையாசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)