Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

1,171 முழுமைப் பெறாத & கைவிடப்பட்டிருந்த வீடமைப்புத் திட்டங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன

27/08/2025 06:28 PM

கோலாலம்பூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முழுமைப் பெறாத மற்றும் கைவிடப்பட்டிருக்கும் மொத்தம் ஆயிரத்து 171 வீடமைப்புத் திட்டங்களை தனியார், முழுமைப் பெறாத மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டப் பணிக்குழு TFST வெற்றிகரமாக சீரமைத்துள்ளது.

இப்பணிக்குழுவின் முயற்சியில், ஜி.டி.வி எனப்படும் ஒட்டுமொத்த வளர்ச்சி மதிப்பீட்டில், மொத்தம் பத்தாயிரத்து 13 கோடியே 55 லட்சம் ரிங்கிட் செலவில், ஒரு லட்சத்து 39, 848 வீடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

குடியிருப்பு திட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான அண்மைய நிலவரம் குறித்து, இன்று மக்களவையில் வாங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, TFST-இன் குறிப்பிடத்தக்க வெற்றிகளில், 2022-ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என்று திட்டமிட்டு, 2018ஆம் ஆண்டே நிறுத்தம் கண்டிருந்தே கோம்பாக் ஹெக்டர் குடியிருப்புத் திட்டத்தை சீரமைப்பதும் அடங்கும் என்றும் ஙா மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)