கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) - நாட்டில் டெங்கி பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஒன்றான சுகாதார அமைச்சு அமல்படுத்திய WMO எனப்படும் கொசு ஒழிப்புக்கான WOLBAKIA நடவடிக்கை வரவேற்கத்தக்க பலனை அளித்துள்ளது.
அந்நடவடிக்கையின் வழி பல பகுதிகளில் 100 விழுக்காடு வரை பாதிப்புகள் குறைந்துள்ளதாக தொடக்கக்கட்ட தரவுகள் காட்டுவதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.
ஏடிஸ் கொசுக்கள் விடுவிக்கப்பட்ட 45-இல் 20 அல்லது 44.4 விழுக்காட்டு இடங்களில், இரண்டு ஆண்டுகளுக்கான WMO ஏடிஸ் கொசு விடுவிப்புக் காலக்கட்டம், காலவதியானது, ஆறு ஆண்டுகள் அமலாக்கத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிய வந்ததாக டத்தோ லுகானிஸ்மான் தெரிவித்தார்.
மேலும், 25 வட்டாரங்களுக்கு மதிப்பீடு செய்வதற்கு முன்னதாக, குறைந்தது இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பு காலம் தேவை என்று அவர் விவரித்தார்.
"இதுவரை, வோல்பாச்சியாவால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களை விடுவிப்பதில் மொத்தம் 60 இடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 15 ஆய்வு இடங்களும், மேலும் 45 இடங்களும் வோல்பாச்சியாவால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களை விடுவிப்பதற்கான செயல்பாட்டு நிலையில் உள்ளன," என்றார் அவர்.
இன்று மேலவையில்செனட்டர் டாக்டர் ஏ.லிங்கேஸ்வரன் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)