புத்ராஜெயா, 29 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இதனிடையே, பல்வேறு படைப்பிரிவுகளின் பங்கேற்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு வளங்களைப் பயன்படுத்தி படைப்புகள் ஆகியவற்றுடன் 2025 தேசிய தின கொண்டாட்டத்திற்கான முழு ஒத்திகையும் புத்ராஜெயா சதுக்கத்தில் சுமூகமாக நடைபெற்றது.
திட்டமிட்டபடி முழு ஒத்திகையும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் நிறைவு பெற்றதாக தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Seri Mohamad Fauzi Md Isa தெரிவித்தார்.
''இன்றைய இறுதி ஒத்திகை, முழு ஒத்திகையாக இருந்தது. வானிலை சீராக இருந்ததில் மகிழ்ச்சி. நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. அணிவகுப்பும் சிறப்பாக இருந்தது. அனைத்தும் உண்மையில் நாம் திட்டமிட்ட சூழ்நிலையில் இருந்தது. இன்று நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம், முன்பு பதிவு செய்தபடி, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். அதுவே நாங்கள் திட்டமிட்டுள்ளோம்'', என்றார் அவர்.
இன்றைய முழு ஒத்திகைக்கும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை தந்து, இறுதி கட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்டது மகிழ்ச்சியளித்ததாக Datuk Seri Mohamad Fauzi கூறினார்.
கடந்த ஆண்டைப் போலவே, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக Mohamad Fauzi தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)